நடிகர் விஜய் சராசரி நபராக இருந்து இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறியது எப்படி?

1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளை தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்.

தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள லியோ படம் நாடு முழுவதும் எதிரொலித்து வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அதிகபட்சமாக முன்பதிவுகளுடன், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த படம் முன்பதிவிலேயே சுமார் 34 கோடி வசூல் செய்து ரஜினியின் ஜெயிலர் படத்தின் (18 கோடி) சாதனையை முறியத்துள்ளது.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், லியோ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா இல்லாமல், எந்த ஒரு விளம்பர நிகழ்வுகளும் இல்லாமல் முன்பதிவில் சாதித்துள்ளது என்று அடிக்கோடிட்டு காட்டும் அளவுக்கு தளபதி விஜய் சினிமா உலகின் அசைக்க முடியாத ஆளுமையான வளர்ந்துள்ளார்.

90-களின் தொடக்கத்தில் 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளை தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவருக்கு நாளைய தீர்ப்பு படம் நாயகன் அந்தஸ்தை கொடுத்து. அதன்பிறகு இந்த 31 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும், வளர்ந்து வரும் நடிகராக ‘இளைய தளபதி’ என்ற படத்த்துடன் வலம் வந்தார்.

இறுதியாக தற்போது ‘தளபதி’ ஆகவும் மாறியுள்ள விஜய் தென்னிந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறியுள்ளார். அவர் வளர்ந்து ஒரு முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை விளக்குவது அவ்வளவு சுலபம் இல்லை. அவரது அர்ப்பணிப்புள்ள ரசிகர்கள் கூட ஏன் அவர் மீது இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என்பதை விளக்க சிரமப்படுகிறார்கள், சிலர் அவரது நடனத் திறனைப் பாராட்டினாலும், மற்றவர்கள் அவரது நகைச்சுவை திறனையும் வெகுஜன ஈர்ப்பையும் எடுத்துக்காட்டுகின்றனர். ஒரு சிலர் அவரது திரைப்படங்களில் உள்ள பொருத்தமான கதைகள் அவரது புகழுக்கு காரணம் என்று கூறுகிறார்கள். குறிப்பாக தமிழ் சினிமாவில் நடனம், நகைச்சுவை, கவர்ச்சி மற்றும் சமூகப் பிரச்சினைகளை மிகவும் தைரியமாக எடுத்துரைப்பதில் சிறந்து விளங்கும் ஏராளமான நடிகர்கள் இருப்பதால், இந்த விளக்கங்களில் விஜய்க்கு பொருத்தமாக இல்லை.

Leave a Comment